குழந்தையின் உடலில் அழித்தாலும் மீண்டும் வரும் குரான் வசனங்கள் உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
ரஷ்யாவில் ஒரு குழந்தையின் உடம்பில் குர்ஆன் ஆயத்துக்கள் வருகிறது அதை அழித்து விட்டாலும் திரும்பவும் வருகிறது என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள்?
அந்த செய்தி உண்மையா? என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அப்படியானால் உண்மை என்ன?
இந்த சம்பவம் கடந்த 2009 வருடம் அக்டோபர் மாதம் நடந்த செய்தியாகும் அன்று முதல் இந்த பொய்யான வதந்தி செய்தி அடிக்கடி பலரும் ஷேர் செய்துவருகிண்ரார்கள்
இது ஒருவகை தோல் வியாதியாகும் ஹர்டிகேரியா என்கின்ற படை நோய் இது. தோலின் மேற்பரப்பின்
கீழ் உள்ள இரத்த நாளங்களிலிருந்து கசியும் சிறிய அளவிலான திரவத்தால்
ஏற்படும் அரிப்பு, சொறி, காரணமாக தோலின் மேற்பரப்பில் இது போன்று சில
பார்பதற்கு உருவ அமைப்பை போல் ஏற்படலாம்
ஆனால் குர்ஆன் வசனங்களை போன்று தோன்றுவதற்கு எந்த சாத்தியம் இல்லை
டெர்மடோகிராஃபிசம்
(டெர்மோகிராபிசம் என்றும் டெர்மடோகிராஃபியா என்றும் அழைக்கப்படுகிறது)
என்றால் தோலில் எழுதுதல். இந்த நிலையில் உள்ளவர்கள் சருமத்தின் பகுதிகளில்
சொறி ஏற்படுகிறது. இதன் காரணமாக, ஒரு விரல் அல்லது பிற பொருளைக் கொண்டு
உறுதியான அழுத்தத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் தோலில் 'எழுத'
முடியும்.
இது ஒரு சில மணி நேரத்திற்கும் குறைவாக நீடிக்கும்.
இது ஒரு சில மணி நேரத்திற்கும் குறைவாக நீடிக்கும்.
20
பேரில் 1 வருக்கு ஆரம்பகால வயதில் இது பொதுவாக உருவாகிறது. பெரும்பாலான
சந்தர்ப்பங்களில், இந்த நிலை சில ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து ,
பிறகு குறைந்து விடும்.
அட்மின் மிடியா ஆதாரம்
அட்மின் மிடியா ஆதாரம்
ஆகவே இந்த முறையில் குர்ஆன் வசனங்களை இது போன்று எழுதுவதற்க்கு அதிகம் வாய்ப்பு இருக்கின்றது.
இந்த முறையை பயன் படுத்தித்தான் இந்த பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர்.
Tags: மறுப்பு செய்தி