ரிசர்வ் வங்கி பணம் அச்சடிக்கும் இடத்தில் 10 ஆயிரம் கோடி திருடியவர்? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
Dy Director Of RBI Currency Printing Unit Was Stealing Cash Daily In His Shoes.
He Was Caught Red Handed By CISF personnel.
₹10000 Crores Were Recovered From His Home
₹10000 Crores Were Recovered From His Home
See The Video
என்ற ஓர் செய்தியினை பலரும் பலருக்கும் ஷேர் செய்து வருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா?
உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
உண்மை என்ன?
இந்தூர் உள்ள மிகவும் பாதுகாப்பான பணம் அச்சடிக்கும் வங்கியில் இருந்து ரூ .90 லட்சம் திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அச்சடிக்கும் நேட்டுக்களில் எதாவது பிழை இருந்தால் அதை நிராகரிக்கும் துறை மேற்பார்வையாளரான மனோகர் வர்மா தனது வேலை முடிந்து வீடு திரும்பும் போது தனது ஷூவில் ஒளித்து வைத்து பாதுகாப்பு சோதனை எல்லாம் தாண்டி மூன்று மாத காலமாக " .500 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை எடுத்து வந்துள்ளார்
சிசிடிவி கேமராவில் ஒருநாள் கண்காணித்த போது அந்த பழைய நோட்டுகள் இருக்கும் அட்டை பெட்டி அருகில் குனிந்து எழுவதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை வீட்டிற்கு செல்லும்போது சோதனையிட்டதில் அவரது ஷூ மற்றும் சாக்ஸில் ரூபாய் நோட்டுகளை ஒளித்து வைத்து திருடி எடுத்துச்செல்வது கண்டுபிடிக்கப்பட்டது
அதன் பிறகு அவர் வீட்டை சோதனையிட்டதில்
ஒரு பையில் 26,9300 ரூபாயிம் மற்றொரு பையில் 64 லட்சம் என ஆக மொத்தம்
ரூபாய் 90 லட்சத்து 9300 ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெற்றது.
ஒரு பையில் 26,9300 ரூபாயிம் மற்றொரு பையில் 64 லட்சம் என ஆக மொத்தம்
ரூபாய் 90 லட்சத்து 9300 ரூபாய் மட்டுமே கிடைக்கப்பெற்றது.
மேற்கண்ட இந்த தகவலை தான் தவறாக 10,000 கோடி எடுக்கப்பட்டதாக வலைதளத்தில் ஒரு பொய்யான செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
மேலும் இந்த சம்பவம் கடந்த 27.01.2018 ல் நடந்தது
அட்மின் மீடியா ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைல் போனில் பெற அட்மின் மீடியா ஆப் டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
Tags: மறுப்பு செய்தி