Breaking News

10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கீடு..

அட்மின் மீடியா
0
10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுக்கு கூடுதலாக அரைமணி நேரம் ஒதுக்கீடு..


இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டத்தின் கீழ் தேர்வு நடைபெற உள்ளது. புதிய பாடத் திட்டத்தின் படி நடத்தப்படும் தேர்வில் சிந்தித்து விடையளிக்கும் வினாத்தாள் இருக்கும்.

இந்நிலையில் மாணவர்கள் கேள்விகளுக்கு விடை அளிக்க கூடுதல் நேரம் தேவைப்படும் என்ற கோரிக்கை எழுந்ததால், அதற்கேற்றவாறு மாணவர்களின் நலன் கருதி கூடுதல் நேரம் வழங்க கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. 

அதன் அடிப்படையில் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தற்போது உள்ள  2.30 மணி நேரத்தை 3 மணி நேரமாக அதிகரித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback