சவுதிக்கு இனி சுற்றுலா செல்லலாம்
அட்மின் மீடியா
0
சவுதிக்கு இனி சுற்றுலா செல்லலாம்
இதுவுரை சவுதி அரேபியாவுக்கு வேலைக்காகவும், மெக்கா,
மதீனாவுக்கு புனித யாத்திரை செல்வோருக்கு மட்டுமே, அந்த நாட்டு அரசு, விசா வழங்கி வந்தது
தற்போது சுற்றுலா வாயிலாகவும் வருவாயை பெருக்க சவுதி
அரசு முடிவு செய்து முதன்முறையாக சுற்றுலா பயணிகளுக்கு கதவு திறக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டம் என்பது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030 சீர்திருத்த திட்டத்தின் மையப்பகுதிகளில் ஒன்றாகும்.
சுற்றுலா விசாவை பயன்படுத்தி மெக்கா, மதீனா ஆகிய இடங்களுக்கு செல்ல முடியாது என்றும் சவுதி அறிவித்துள்ளது.
49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் விசா வழங்கபடும் என சவுதி இளவரசர் அறிவித்துள்ளார்