Breaking News

விக்ரம் லேண்டருக்கு மின்சப்ளை துவங்கியதா ?

அட்மின் மீடியா
0
விக்ரம் லேண்டருக்கு மின்சப்ளை துவங்கியதா ? உண்மை என்ன ?



சந்திராயன்-2 லேண்டர் பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கியது. ஆர்பிட்டர் தட்டி எழுப்பியது விக்ரம் லேண்டர் ரோபோவில் உள்ள பிரக்யான் கருவி இன்று இரவுக்குள் பணி துவங்கும் இஸ்ரோவில் ஆர்ப்பரிப்பு. வீழ்ந்த விக்ரம் லேண்டர் நிலவில் சாய்ந்த நிலையிலும் உள்ளிருக்கும் பிரக்யான் எந்நேரமும் வெளிவரலாம்.


என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்


கடந்த 11ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்ரம் லேண்டர் தரை கட்டுப்பாட்டை இழந்தது
இது நாட்டு மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது


கட்டுப்பாட்டை இழந்த விக்ரம் லேண்டர் நிலவில் கண்டுபிடிக்கப்பட்டது


ஆனால் அதனுடன் இன்னும் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை


நம் விஞ்ஞானிகள் தற்போது வரை விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றார்கள்


ஆனால் இன்றுவரை விக்ரம் லேண்டர் பற்றி பல பொய் செய்திகள் வலம் வருகின்றது


இந்நிலையில், விக்ரம் லேண்டரில் உள்ள பேட்டரிக்கு மின்சப்ளை துவங்கி உள்ளதாகவும், ரோபோவில் உள்ள பிரக்யான் கருவி இன்று இரவுக்குள் பணி துவங்கி விடும் என இஸ்ரோ ஆர்பரித்து இருப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது.


விக்ரம் லேண்டர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இஸ்ரோ தரப்பில் இருந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களுக்கும் வெளியிடப்படும்


இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம்




எனவே பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this