Breaking News

பேனர் வைக்க தடை விதித்த பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னிர் செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேனர் வைக்கபட்டதா உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
பேனர் வைக்க தடை விதித்த  பழனிச்சாமி  மற்றும் ஒ.பன்னிர் செல்வம்
அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி என சமூக வலைதளங்களில்  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது ! போட்டோ ஷாப் செய்யப்பட்டது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கரணையில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ உயிரிழந்தார்.

இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றது அதற்க்கு நீதிமன்றம் அரசியல் கட்சிகள் இனி அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என உத்ரவாதம் அளிக்க சொன்னது.

நமது அட்மின் மீடியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் ஸ்டாலின் அவர்களுக்கும் இதே போன்று பேனர் வைத்த பற்றி மறுப்பு செய்தி வெளியிட்டு இருந்தோம்

அதே போன்று இன்று அதிமுகவினருக்கும் பேனர் வைப்பது போன்று ஒரு போட்டோ பரப்பப்படுகின்றது

யாரோ சிலர் நன்றி தெரிவிப்பது போன்று  போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை  சமுகவளைதளத்தில் தங்களுக்கு பிடித்த அல்லது பிடிக்காத  அரசியல் கட்சிகளின் பெயரை போட்டு  வெளியிடுகின்றார்கள்.

 மேலும் மேலே உள்ள புகைப்படம் கடந்த 11.09.2017 அன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்க்கு வைக்க பட்ட பேனர்




இனி இது போல் எந்த எந்த கட்சிக்கு வரும் என தெரிய வில்லை

எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback