கல்வி தொலைகாட்சி இன்று முதல் ஒளிபரப்பு : உங்கள் மொபைல் மூலம் பார்பது எப்படி?
அட்மின் மீடியா
0
தமிழக அரசின் சார்பில் தொடங்கப்பட இருக்கும் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இதனை அனைத்து பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய சேனல் தொடங்கியுள்ளது
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன்பெற முடியும்.
கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்து அதில் உள்ள ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்