Breaking News

இவ்வளவு பெரிய ஜெல்லி மீனா.......

அட்மின் மீடியா
0
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரியிலாளர் லிஸ்ஸி டாலி (Lizzie Daly ). லிஸ்ஸி தனது நிறுவனத்தைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் அபாட்டுடன் இங்கிலாந்து நாட்டு ஆழ்கடலொன்றில் இறங்கியிருந்தார்.



அப்போதுதான் ஆளுயர ஜெல்லி மீன் ஒன்றைப் பார்த்திருக்கிறார்கள்.
லிஸ்ஸிக்குப் பக்கத்தில் சென்ற அந்த ஜெல்லி மீனை அபாட் படம் பிடிக்க, அதன் உருவம் எவ்வளவு பெரியதென்பதை அழகாக காட்டும் புகைப்படமாக அது மாறியது.


ஒரே நாளில் வைரலும் ஆனது.



https://youtu.be/cZT-_VbKBuc


``நான் மூச்சடைத்துப் போனேன். அரை மணி நேரமாக அங்குதான் நீந்திக்கொண்டிருந்தோம். திடீரென இவ்வளவு பெரிய ஜெல்லி மீன் வருமென நினைக்கவேயில்லை" என்கிறார் லிஸ்ஸி.
ஜெல்லி மீன்கள் பொதுவாக சாந்தமானவை. பார்க்கவும் அழகாக, சிறியதாக இருக்கும். இங்கிலாந்து கடல்களில் கோடைக்காலங்களில் இவை அதிகம் காணப்படும். இதில் ஒரு வகைதான் Barrel jellies. இந்த வகை ஜெல்லிகள் கொஞ்சம் பெரியதாக வளரும்.


ஆனாலும் இந்த சைஸில் இதுவரை யாருமே ஜெல்லி மீனைப் பார்த்ததில்லை.

Give Us Your Feedback