வாட்ஸ்ஆப்பில் தலாக் : கணவர் மீது வழக்கு
அட்மின் மீடியா
0
வெளிநாட்டில் இருந்தபடி வாட்ஸ்ஆப்பில் மூன்று முறை தலாக் அனுப்பி மனைவியை விவாகரத்து செய்ய முயன்றவர் மீது மனைவி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தின் வல்சத் மாவட்டத்தின் சஞ்சன் பகுதியை சேர்ந்த பெண்ணான பர்ஹிமிற்கு, வெளிநாட்டில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவரது கணவர் ஜெய்லுன் கலியா, கடந்த மாதம் வாட்ஸப்பில் வாட்ஸ்ஆப் மூலம் 3 முறை தலாக் அனுப்பி உள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பப்பட்ட இந்த முத்தலாக்கை பிரிண்ட் அவுட் எடுத்த கலியாவின் பெற்றோர்களான ஜாவித் மற்றும் நபிசா ஆகியோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, கலியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கலியா வெளிநாட்டில் உள்ளதால் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags: இந்திய செய்திகள்