மோடி அரசின் அடுத்த ஆப்பு ரூ.10 லட்சத்திற்கும் மேல் வங்கியிலிருந்து பணம் எடுத்தால் வரி.! மத்திய அரசு புதிய திட்டம்
அட்மின் மீடியா
0
வங்கியிலிருந்து ஆண்டுக்கு 10 லட்சம்
ருபாய்க்கும் மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக வங்கியிலிருந்து
ஆண்டுக்கு ரொக்கமாக ரூ.10 லட்சத்திற்கும் மேல் எடுப்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.10 லட்சத்திற்கு மேல் அனைத்து தரப்பும் பணபரிவர்த்தனையில்
ஈடுபட போவதில்லை. குறிப்பிட்ட சில தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே ரூ.10
லட்சமோஅல்லது அதற்கு மேலோ பண பரிவர்த்தனையில் ஈடுபடுவார்கள்.
அதனால் அரசின் இந்த புதிய
வரி விதிக்கும் முடிவு, நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பால் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனை இன்னும் அதிககரிக்கும்
வாய்ப்பு ஏற்படும் என நம்புவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வரும் ஜூலை 5-ம் தேதி பட்ஜெட்
தாக்கலின் போது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.