காஸா மக்களுக்காக துவா செய்யுங்கள்
அட்மின் மீடியா
0
*நான் காஸா பேசுகிறேன்!*
அருள் புரிந்த இம்மாதத்தில் ஷஹிதாக்கப்படும் என் மக்களை பற்றி பேச கூட இந்த உலகில் வாழும் முஸ்லிம்களுக்கு நேரமில்லை.
ஆம் நான் காஸா பேசுகிறேன்!
இரவு தொழுகைக்காக நீங்கள் தாய், தந்தை, மகள், மகன் என ஒன்றாக பள்ளிவாசல்களை நோக்கி செல்கிறீர்கள், ஆனால் எனது மக்களோ அவர்களின் தாய், மனைவி, மகள், மகனை தோலில் சுமந்தவர்களாக ஜனாஸா தொழுகைக்காக பள்ளிவாசலையும், கபர்ஸ்தானையும் நோக்கி செல்கிறார்கள்.
ஆம் நான் காஸா பேசுகிறேன்!
உலகில் எங்கு பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தலைப்பு செய்தியாக காட்டும் ஊடகங்களுக்கு, எனது நாட்டில் நடப்பது மட்டும் பயங்கரவாத தாக்குதல் என தெரியாமல் போனது ஏனோ!
ஆம் நான் காஸா பேசுகிறேன்!
ரமலான் கோடை காலத்தில் வந்தால் குழந்தைகளும் பெரியவர்களும் எவ்வாறு நோன்பு வைப்பார்கள் என வருத்தப்படும் பல நல்ல உள்ளங்களுக்கு, எனது மக்களுக்கு மட்டும் ரமலான் மாதம் போர் காலத்தில் வருவதை பற்றிய வருத்தம் இல்லாமல் போனது ஏனோ?
ஆம் நான் காஸா பேசுகிறேன்!
என் மீது தாக்குதல் நடக்கும்போது எல்லாம் என்னை பற்றி எழுதியவர்களும், பேசியவர்களும், எனக்காக பிரார்த்தனை செய்தவர்களும் இன்று மீண்டும் என்மீது இழைக்கப்படும் அநீதிகளை கண்டு மவுனம் காப்பது ஏனோ?
ஆம் நான் காஸா பேசுகிறேன்!
எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்யாமல் இருந்தாலும் சரி! என்னை நினைத்து நீங்கள் வருத்தப்படாமல் இருந்தாலும் சரி! என் மக்கள் படும் துயரங்களை அல்லாஹ் பார்க்காமல் இல்லை. ஆனால் நிச்சயமாக நீங்கள் என்மீது காட்டிய அலட்சியத்திற்காக பதில் கூற வேண்டி இருக்கும்.
நீங்கள் தான் மறதியாளர்கள் அல்லவா!
ஆம் மீண்டும் நினைவு படுத்துகிறேன் நான் காஸா பேசுகிறேன்.
காஸாவின் முழு வரலாற்றை பாருங்கள்
உங்கள் கண்களில் கண்ணீரை வரவைக்கும் காஸாவின் கோரத்தை பாரீர்