Breaking News

சென்னை மக்களின் அடுத்த பிரச்சனை

அட்மின் மீடியா
0

சென்னை மக்களின் அடுத்த பிரச்சனை




நிலத்தடி நீரை எடுக்க முறையான அனுமதி அளிக்க வேண்டும்.  
தண்ணீர் லாரிகளுக்கு சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.  
இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனி வாரியம் அமைக்க தமிழக அரசு முன் வர வேண்டும்  

ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மே 27-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த போராட்டத்தினால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கி வரும் சுமார் 4,500 தண்ணீர் லாரிகளின் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அத்தியாவசியத் தேவைகளுக்கும் தண்ணீர் லாரிகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை சொல்லில் வர்ணிக்க முடியாது.

அத்ற்க்கு முன்னதாக அரசு இப்பிரச்சனையை விரைந்து சரி செய்ய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் 

Give Us Your Feedback