8 ஆயிரம் பெண்களுக்கு கருத்தடை செய்தார்களா உண்மை என்ன
அட்மின் மீடியா
0
இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு பிறகு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பாதிக்கபட்டனர். அதனை தொடர்ந்து தற்போதுதான் இலங்கையில் ஓரளவிற்கு அமைதி உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் மீண்டும் இலங்கை இந்து மற்றும் பௌத்த மக்களை கொந்தளிக்கும் அளவிற்கு மீண்டும் ஒரு கொடுமை அரங்கேறியுள்ளது. இலங்கையை சேர்ந்த மருத்துவர் சையது மொஹமட் சாயி என்பவர் தன் மருத்துவமனைக்கு பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கும். பெண்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் கட்டாய கருக்கலைப்பு மற்றும் கருத்தடை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் அதனால் அவரை கைது செய்துள்ளதாகவும். என்று ஒரு செய்தி பரவுகின்றது
இது உண்மையா
மேலே உள்ள தகவல் பொய்யானது ஆகும். மேலும் போலிஸார் அவரை குண்டுவிடிப்பு சம்மந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்கள் என்றும் இலங்கை போலிஸார் விளக்கம் அளித்துள்ளார்கள்
ஆதாரம் 1
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி