Breaking News

ஆகஸ்ட் 15முதல் கோக், பெப்சி விற்பனை இல்லை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஆகஸ்ட் 15முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.



ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் நடந்த போது, கோக் பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அன்றைக்கு வணிக அமைப்புகள் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பதற்கு தடை விதித்தன.அதன்பின்னர் சிறிது காலத்திற்கு பின் மெல்ல மெல்ல, அன்னிய பொருட்களான கோக், பெப்சி விற்பனை தமிழகத்தில் ஆரம்பம் ஆனது.

இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தமிழகத்தில் ஆகஸ்ட் 15 முதல் கோக், பெப்சி உள்பட அந்நிய குளிர்பானங்கள் விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும் என்றார்.

Give Us Your Feedback