Breaking News

Breaking: திருமண இ-பதிவு புதிய நடைமுறையை அறிவித்தது தமிழக அரசு.!! முழு விவரம்

அட்மின் மீடியா
0

அழைப்பிதழில் பெயர் கட்டாயம்: திருமணத்திற்கான இ-பதிவு நிபந்தனைகள்

கொரனோ பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ- பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் திருமணம் ஆகிய காரணங்களுக்காக மட்டுமே இ பதிவு வழங்கப்பட்டது. 

கடந்த சில தினங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கான பிரிவை பலர் தவறாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி இ- பதவிலிருந்து திருமணம் என்ற பிரிவு நீக்கம் செய்யப்பட்டது

.இந்நிலையில் புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான இ-பதிவு முறை மீண்டும் சேர்க்கப்பட்டது.

அதன் படி புதிய விதிமுறைகள்


  • திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும்


  • மணமகன், மணமகள், தாய், தந்தை என இவர்களில் ஒருவர் மட்டுமே இ - பதிவு செய்யவேண்டும்


  • இ - பதிவை மேற்கொள்ளும் விண்ணப்பதாரரின் பெயர் மணமகன், மணமகள், தாய், தந்தை பெயர் திருமண அழைப்பிதழில் இருக்க வேண்டும் 


  • திருமண பத்திரிகையில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே இ-பதிவு சான்றிதழை பெற முடியும்.


  • இ - பதிவின் போது திருமண அழைப்பிதழை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். 


  • தவறான தகவல் அளித்து ஒரு நிகழ்வுக்கு அதிகமுறை இ - பதிவு செய்தால் சிவில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் 


  • திருமண நிகழ்வுக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரே இ-பதிவு


  • விழாவில் பங்கேற்பவர்களின் அனைத்து வாகனங்களும் ஒரே இ-பதிவில் குறிப்பிட வேண்டும்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback