முரசு புயல் தற்போது எங்கு உள்ளது? எப்பொழுது கரையை கடக்கும் ஆன்லைனில் பார்ப்பது எப்படி VIEW windy live weather
முரசு புயல் தற்போது எங்கு உள்ளது? எப்பொழுது கரையை கடக்கும் ஆன்லைனில் பார்ப்பது எப்படி VIEW windy live weather

வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல், தீவிரப் புயலாக வலுவடைந்துள்ளது..சென்னைக்கு கிழக்கே 260 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள முரசு புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் கரையைக் கடக்கும் - வானிலை மையம்
31-10-26) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (31-10-26) காலை 1130 மணிஅளவில் அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Depression). பின்னர் இது மேலும் வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து (01.11.2026) காலை 0530 மணிஅளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), 0830 அளவில் அதே பகுதியிலும் நிலவியது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் (01.11.2026) காலை 1130 மணிஅளவில் புயலாக ("முரசு") (Cyclonic Storm) நிலவுகிறது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் தீவிர புயலாகவும் (Severe Cyclonic Storm) வலுப்பெறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே 02.11.2026 நள்ளிரவு -03.11.2026 அதிகாலைவேளையில் கரையை கடக்கக்கூடும்.
சுமார் 1.5 கிமீ உயரத்தில் கேரளா-கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து தெற்கு மகாராஷ்டிரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
Tags: தமிழக செய்திகள்
