ஜனவரி முதல் பழைய செக் புத்தகம் செல்லாது என பரவும் தகவல் உண்மை என்ன
ஜனவரி முதல் பழைய செக் புத்தகம் செல்லாது என பரவும் தகவல் உண்மை என்ன
சமூக வலைதளங்களில் பரவிய செய்தி:-
2027 ஜனவரி 1-ஆம் தேதி முதல் புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காசோலை முறை (CTS - Cheque Truncation System) செக் புக் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகச் சமூக ஊடகங்களில் ஒரு தகவல்கள் பரவி வந்தது
உண்மை என்ன:-
இந்தத் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் மக்களைத் திசைதிருப்பக் கூடியவை என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை என்பதையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது
ரிசர்வ் வங்கியின் எக்ஸ் தள அறிவிப்பு;
தற்போது புழக்கத்தில் இருக்கும் காசோலை புத்தகங்கள் 2026ம் ஆண்டு டிச.31ம் தேதிக்கு பினன்ர் மாற்றப்பட உள்ளதாகவும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் நவீன காசோலை புத்தகம் 2027ம் ஆண்டு ஜன.1 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
இது ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது. தற்போதுள்ள சூழலில் காசோலை புத்தகங்களில் எந்த மாற்றத்தையும் ரிசர்வ் வங்கி கொண்டு வரவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
சமூக வலை தளங்களில் வரும் செய்தி தவறு, மக்களை திசைதிருப்பக்கூடியது. இத்தகைய விவகாரங்களில் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்பபோது அறிவிப்புகளை வெளியிடும். அதை பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.என ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.
அட்மின் மீடியா ஆதாரம் இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/RBI/status/2119057448380268707
Tags: தமிழக செய்திகள் மறுப்பு செய்தி FACT CHECK
