வங்கக்கடலில் 13-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வங்கக்கடலில் 13-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
நவம்பர் 13-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவ. 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதால் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
