Breaking News

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் Register your name in Electoral Roll

அட்மின் மீடியா
0

எங்கும் அலையாமல் ஆன்லைன் மூலம் மிக எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி என இங்கு பார்க்கலாம் வாங்க....Register your name in Electoral Roll

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


நவ.12ம் தேதி முதல் டிச.11ம் தேதி வரை புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்களை செய்ய பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு 2027ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது

நவம்பர் 12 முதல், டிசம்பர் 11 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தங்களுக்கு வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு.

படிவம் 6 – புதிதாக பெயர் சேர்த்தல் 

வாக்காளர் பட்டியலில் முதல்முறை பெயர் சேர்ப்பதற்கான அல்லது ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு வசிப்பிடம் மாறியதால் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம்

படிவம் 7 – பெயர் நீக்கல் செய்ய

வாக்காளர் பட்டியலில் வேறுறொரு நபரின் பெயரை சேர்க்க ஆட்சேபித்தலுக்கான / தன்னுடைய பெயரையே நீக்குவதற்கான / இறப்பு / வசிப்பிடம் மாறிய காரணத்தினால் வேறொரு நபரின் பெயரை நீக்கக் கோருவதற்கான விண்ணப்பம்

படிவம் 8 – வாக்காளர் அட்டையில் உள்ள பிழையை திருத்தம் செய்ய

வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை திருத்துவதற்கான விண்ணப்பம் பதிவிறக்கம் 

படிவம் – 8A – வாக்காளர் பட்டியலில் பதிவை இடம் மாற்றுவதற்கான விண்ணப்பம் 

ஏற்கனவே வாக்காளர் அட்டை இருந்து அவர்கள் ஒரே சட்டமன்ற தொகுதியில் ஒரு வசிப்பிடத்திலிருந்து மற்றொரு வசிப்பிடத்திற்கு இடம் மாறினால் புதிய வாக்குச்சாவடி மாற்ற

வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி

முதலில் https://voters.eci.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும். அதில் லாகின் என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்

பின் அவற்றில் தாங்கள் ஏற்கெனவே User ID கிரியேட் செய்து வைத்திருந்தால் அதில் User ID மற்றும் password கொடுத்து login செய்து கொள்ளுங்கள். 

இல்லை என்றால் அங்கு Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்து.உங்களுக்கான Account-ஐ கிரியேட் செய்ய வேண்டும்.

Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்தவுடன் ஒரு PAGE ஓபன் ஆகும் அதில் உங்களுடைய தொலைபேசி எண்ணை பதிவு செய்து அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள captcha code-ஐ டைப் செய்து Send OTP என்பதை கிளிக் செய்யவும்

அடுத்து உங்கள் மொபைல் நம்பருக்கு ஒரு OTP எண் அனுப்பப்படும். அதனை ENTER OTP என்ற இடத்தில் டைப் செய்து Verify என்பதை கிளிக் செய்யுங்கள்.

இப்பொழுது தங்களுடைய மொபையில் நம்பர் Verify-ஐ ஆகிவிடும்.அதன் பிறகு I don’t have EPIC number என்பதை கிளிக் செய்து, தங்களுடைய first name, lest name, password, confirm password ஆகியவற்றை டைப் செய்து Register என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்பொழுது தங்களுடைய Account Register ஆகிவிடும். அதன் பிறகு user id & password-ஐ கொடுத்து லாகின் செய்து கொள்ளவும்

அடுத்து புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க  படிவம் 6 என்பதை கிளிக் செய்து

உங்கள் தனிப்பட்ட விவரங்கள் உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று முதலியவற்றை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்யவும். 

அனைத்து விவரங்களையும் வழங்கி பின்பு, எல்லாம் பூர்த்தி செய்தவுடன் ’Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான்  தங்களுக்கு ஒரு Reference id கொடுக்கப்படும் அந்த id நம்பரை குறித்து வைத்து கொள்ளவும்.

இந்த நம்பரை வைத்துதான் தங்களுடைய Status-ஐ track செய்து பார்க்க முடியும்.

பின்பு track status என்பதை கிளிக் செய்யுங்கள். பின் அந்த Reference id-ஐ டைப் செய்து track status என்பதை கிளிக் செய்து பார்த்தால் தான் தங்களுடைய விண்ணப்ப நிலை தெரியும்

உங்களுடைய application accepted செய்யப்பட்டால் தங்களுக்கு ஒரு EPIC வரும் அவற்றை எடுத்து கொண்டு. தங்கள் ஊரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை பெற்று கொள்ளலாம்

இதன்மூலம் வீட்டில் இருந்தபடியே எந்தவித கட்டணமுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.

how to apply for passport
how to apply for passport

ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என சரிபார்க்கலாம்

https://electoralsearch.eci.gov.in/  click here

ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

முதலில் கீழே மேலே உள்ள  Link click செய்யுங்கள் அதில் Search by EPIC என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து மொழியை தேர்ந்தெடுக்கவும்

அதன்பின்பு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிடவும்

அதன் பின்பு உங்கள் மாநிலத்தினை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சா கோடு சரியாக பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள் 

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

https://electoralsearch.eci.gov.in/  click here

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி 

https://electoralsearch.eci.gov.in/uesfmempmlkypo

https://electoralsearch.eci.gov.in/  click here

ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்

ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி

முதலில் கீழே மேலே உள்ள  Link click செய்யுங்கள் அதில் Search by EPIC என்பதை கிளிக் செய்யுங்கள் 

அடுத்து மொழியை தேர்ந்தெடுக்கவும்

அதன்பின்பு உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிடவும்

அதன் பின்பு உங்கள் மாநிலத்தினை தேர்ந்தெடுக்கவும்

அடுத்து கீழ் உள்ள கேப்சா கோடு சரியாக பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள் 

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் அதில் உங்க Assembly constituency number, part number, part serial number  note பண்ணிக்கோங்க

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்


புதிய வாக்காளர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால் SEARCH BY DETAILS ஆப்ஷனை க்ளிக் செய்யவும். 

அதில், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்கள் அணைத்தையும் சரியாக பதிவிடவும். பின்னர் கேப்சாவை சரியாக பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்

வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அனைத்து தகவல்களும் சரியாக தெரியாது என்பவர்கள் மூன்றாவது ஆப்ஷனான SERACH BY MOBILE என்பதை க்ளிக் செய்யவும்.

இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவிட்டு, உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ எண்ணை உள்ளிட்டு, கேப்சாவை சரியாக டைப் செய்து search ஆப்சனை க்ளிக் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா என்பதை அறிய, '1950' என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்!

உங்கள் மொபைல் போனில் மெசஜ் ஆப்பில் 

ECI <space> உங்கள் EPIC எண் 

(உதாரணம்: ECI TSK0000000) டைப் செய்து 

'1950' என்ற எண்ணிற்கு அனுப்பினால், 

அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும் அவ்வளவுதான்

ஒருவேளை தகவல் வரவில்லை என்றாலோ அல்லது பெயர் நீக்கப்பட்டிருந்தாலோ, உடனடியாகத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவோ அல்லது அதிகாரிகளிடமோ முறையிடலாம்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback