இந்தியாவில் அறிமுகமான டெங்கு தடுப்பூசி முழு விவரம் QDENGA
இந்தியாவில் அறிமுகமான டெங்கு தடுப்பூசி முழு விவரம்
நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்தியாவில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், ஜெர்மனியின் 'டகேடா ஜி.எம்.பி.எச்.' நிறுவனம் தயாரித்துள்ள 'கியூடெங்கா' (QDENGA) எனப்படும் டெங்கு டெட்ராவேலண்ட் தடுப்பூசியை இறக்குமதி செய்து சந்தைப்படுத்த கடந்த ஜூலை மாதம் அனுமதி அளித்தது.
இந்தியாவில் இத்தடுப்பூசியை விநியோகிக்கும் உரிமையை ஐதராபாத்தைச் சேர்ந்த 'டாக்டர் ரெட்டிஸ் லேபரிட்டரிஸ்' நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது.
எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள், அதாவது ஆண்டின் முதல் பாதியில் இந்தத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 முதல் 60 வயது வரையுள்ள நபர்களுக்காக மத்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் இருந்து 2026ம் ஆண்டு ஜுலையில் க்யூடெங்காவை சந்தைப்படுத்தும் அங்கீகாரத்தை இந்தியா வழங்கியது.இந்த தடுப்பூசியானது, 3 மாதம் இடைவெளியில் இரு தவணைகளாக செலுத்தப்படுகிறது
Tags: தமிழக செய்திகள்
