Breaking News

ரூ.20க்கு ஆவின் நிறுவனத்தின் ரஸ்க் அறிமுகம்

அட்மின் மீடியா
0

ரூ.20க்கு ஆவின் நிறுவனத்தின் ரஸ்க் அறிமுகம் 



தமிழக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனமான,  ஆவின் பால், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பாக், மில்க் பிஸ்கெட் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் ஆவின் நிறுவனம் தற்போது ரஸ்க்-யையும் விற்பனையில் களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், நுகர்வோரை கவரும் வகையில், 'மில்க் ரஸ்க்' விற்பனையை, ஆவின் நிறுவனம் தொடங்கி உள்ளது.மொத்தம், 100 கிராம் எடையுள்ள, 'ஆவின் ரஸ்க்' 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பல்வேறு தனியார் நிறுவனங்கள், 80 கிராம் எடையுள்ள ரஸ்க்கை, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், 20 கிராம் கூடுதலாக சேர்த்து, 20 ரூபாய்க்கு ஆவின் விற்பனை செய்து வருகிறது.மில்க் ரஸ்க்கிற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, ஏலக்காய், முந்திரி, ஓட்ஸ் உள்ளிட்டவை கலந்த ரஸ்க் விற்பனையை தொடங்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback