Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க பெற்றோரின் SIR கட்டாயம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க பெற்றோரின் SIR கட்டாயம் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விரும்பும் புதிய விண்ணப்பதாரர்கள், படிவம் 6 உடன் தங்கள் பெற்றோரின் SIR விவரங்களையும் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள், தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை சமர்பிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. 

தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாக புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை சமர்பிக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது

இதற்காக படிவம் 6ல், பகுதி ஜெ மற்றும் கே ஆகிய பிரிவுகளுக்கு இடையில் உறுதிமொழி பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இது, ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதில் பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்கள் கேட்கப்படுகின்றன. 

பெற்றோரின் எஸ்ஐஆர் விவரங்களை தர வேண்டும். இல்லாவிட்டால் அத்தகைய விவரங்கள் இல்லை என குறிப்பிட வேண்டும். இந்த உறுதிமொழி விவரத்தை பூர்த்தி செய்யாமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது.

இந்தியாவில் புதிய வாக்காளர்கள் அல்லது விடுபட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கும் ஆன்லைன் நடைமுறையில், இந்திய தேர்தல் ஆணையம் (EC) ஒரு புதிய மற்றும் மிக முக்கியமான நிபந்தனையைக் கட்டாயமாக்கியுள்ளது.

எனினும், ஆஃப்லைனில் (நேரடியாக) விண்ணப்பிப்பதற்கான பதிவிறக்கம் செய்யப்படும் படிவத்தில் இந்த பகுதி இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback