Breaking News

தி.மு.க ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டும் என இ.பி.எஸ். திட்டமிட்டார் தேர்தல் முடிவு வந்த பிறகு அ.தி.மு.க-வில் நடந்தது இது தான் - புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல்

அட்மின் மீடியா
0

தி.மு.க ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டும் என இ.பி.எஸ். திட்டமிட்டார் தேர்தல் முடிவு வந்த பிறகு அ.தி.மு.க-வில் நடந்தது இது தான் - புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல்



செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான மரகதம் குமரவேல் ஏற்பாட்டில், மதுராந்தகம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஓட்டல் ஹைவே இன் எதிரே, இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தில் மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணையும் விழா நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் தவெக பொது செயலாளருமான புஸ்ஸி என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளருமான ஆதவ் அர்ஜுனா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் தவெக தலைமை கழக ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், மனிதவள மேலாண்மை துறை அமைச்சரும் செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தவெக செயலாளருமான த.சரத்குமார், செங்கல்பட்டு தெற்கு மாவட்ட தவெக செயலாளர் எம்.எஸ்.பாலாஜி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

அப்போது பேசிய மரகதம் குமரவேல் அவர்கள்:-

மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததாகவும், "இது நியாயமா?" என்று கேள்வி எழுப்பிய அவர், "எனக்கு அரசியலில் அடையாளம் கொடுத்தவர் எம்ஜிஆர். அந்த இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிராக சிலர் செயல்பட்டனர்" என்றும் தெரிவித்தார்

.என் வீட்டில் ரெய்டு நடத்துங்கள்தான் தவெகவில் இணைந்ததற்காக ரூ.50 கோடி பெற்றதாக அதிமுகவினர் பரப்புரை செய்து வருவதாக குற்றம்சாட்டிய மரகதம் குமரவேல், "என் வீட்டில் எந்த நேரத்திலும் ரெய்டு நடத்தலாம். எனக்கு எந்த பயமும் இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை" என்று சவால் விடுத்தார்.

நான் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காகவே அதிமுக நிர்வாகிகள் சிலர் செயல்பட்டனர். மாவட்ட செயலாளர் ஒருவர் திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் பெற்றதாக தகவல்கள் வந்தன. குதிரை பேரம் செய்தது தவெக அல்ல. உண்மையில் குதிரை பேரம் நடத்தியது ஈபிஎஸ்தான்" என்று குற்றம்சாட்டினார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=7TPwUmTqEN0

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback