Breaking News

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான்..!

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான்..!

ஆர்.வி. உதயகுமார் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களிலும் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இவர் அதிமுக கட்சியின் கலை பிரிவு செயலாளர் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கழக உறுப்பிளராகவும், தற்போது மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் உள்ளேன். கட்சியின் தற்போது நிலை குறித்து ஆழ்ந்த வேதனையும் கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள மன நிலையில் கட்சியில் தொடர விருப்பம் இல்லாததால் எனது கலைப்பிரிவு செயலாளர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் என்பதிலிருந்தும் விலகிக்கொள்கிறேன். தற்போது வரை எனது பணியில் துணை நின்ற தங்களுக்கும், முன்னாள் அமைச்சர் பெருமக்களுக்கும் மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கும் நகர, பேரூராட்சி, வட்ட, பகுதி கழக நிர்வாகிகளுக்கும், எனது நன்றியிளை கணத்த இதயத்துடன் தெரிவித்து விடைபெறுகிறேன்.” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை பனையூரில் மாற்று கட்சியினர் தவெகவில் இணையும் விழாவில் ஏராளமானோர் இணைத்த நிலையில் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார் மற்றும் நடிகர் மன்சூர் அலிகானும் அமைச்சர் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்து கொண்டனர்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback