Breaking News

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்: ஆளுநர் அர்லேகர் உரையின் முக்கிய அம்சங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்: ஆளுநர் அர்லேகர் உரையின் முக்கிய அம்சங்கள் முழு விவரம்


சிறப்பம்சம்:-

1 தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது

2 நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான உரை வாசிக்கப்பட்டது

3 ஒன்றிய அரசு, பெரியார் என உரையில் உள்ள மொத்ததையும் ஆளுநர் வாசித்தார்.

4 தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்

5 புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு அரசின் முடிவு

6 மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினால் மட்டுமே வரியை விடுவிப்போம் எனும் மத்திய அரசின் பிடிவாதம் ஏற்கத்தக்கது அல்ல

7 ஒன்றிய அரசு தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய வரியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

8 கல்வியை மத்தியப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்

9 முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் முறியடிக்கப்படும்

10 இந்த அரசு ஆட்சியில் இருக்கும் வரை விவசாயிகள் நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் எடுக்க இலவச அனுமதி

முதலமைச்சர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசின் கீழ் முறைப்படியான முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது. 

இது ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து உடன் தொடங்கியது 

எம்.ஜி.ஆர் 1977ஆம் ஆண்டு நிகழ்த்திய புரட்சியை போல 2026ல் புதிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. 74 ஆண்டுகால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவித்துள்ளார். 

விசில் புரட்சியின் மூலம் புதிய வரலாறு படைத்திருக்கிறது. பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக அரசு சாதனை படைத்துள்ளது. மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்.தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். 

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.ஒன்றிய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க இந்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.பல்வேறு நிதி நெருக்கடிக்கு இடையிலும் சிங்கப்பெண் அதிரடிப் படை உள்ளிட்ட திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு இரு மொழிக் கொள்கையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்.. பின்பற்றும்..

இந்த அரசு தேசிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்க்கிறது.இந்து சமய அறநிலையத் துறையில் அமைப்பு ரீதியான மாற்றத்தை இந்த அரசு மேற்கொள்ள உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமையை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் தேர்வு முகமைகள் மூலம் வெளிப்படைத் தன்மையுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.உலகத் தரத்திலான பயிற்சிகளை அளிக்க ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும்

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் நிதி விடுவிக்கப்படும் என்பதை ஒன்றிய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

தமிழக அரசு இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது. மும்மொழிக் கொள்கையால் கல்விக்கான நிதி சுமார் 4,000 கோடி ரூபாய் மத்திய அரசு மூலம் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

சமூக நீதி சர்வே என்ற பெயரில் சாதிவாரி கணக்கெடுப்பு என்று ஆளுநர் உரையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை பெற்று தர உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

.தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்படும். மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீனவர்கள் தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் அரசுகள் மாறினாலும் பிரச்சினை முடிவுக்கு வந்தபாடில்லை. இதுதொடர்பாக தவெக அரசு சார்பில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீரைப் பெறுவதில் பல்வேறு சிக்கல் நீடிக்கிறது, கர்நாடகா அரசு மேகதாது அணையை கட்டும் முடிவால் தமிழக விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள்; இம்முடிவில் தமிழ்நாடு அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோத கனிமவள கொள்ளையைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback