தமிழ்நாட்டின் நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரிய வில்சன் எந்தெந்த துறைகளில் எவ்வளவு கடன் உள்ளது முழு விவரம்
தமிழ்நாட்டின் நிதி நிலை வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரிய வில்சன் எந்தெந்த துறைகளில் எவ்வளவு கடன் உள்ளது முழு விவரம்
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து இன்று மாலை 5.30 மணிக்கு வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் மரிய வில்சன்
துறை சார்ந்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செய்துமுடிக்கப்பட்ட திட்டங்களின் செலவீனம் மற்றும் இழப்பீடு, அதோடு, செயல்படுத்தாமல் இருக்கும் திட்டங்கள், மாநிலத்திற்கு உள்ள மொத்த கடன், மத்திய அரசிடமிருந்து பெற்ற தொகை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டுள்ளார்
நாளை மாறுநாள் சட்டசபை கூடவுள்ள நிலையில் இன்று மாலை நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி என நிதியமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார்.தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மரிய வில்சன், “மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது.
தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி. வருவாய் பற்றாக்குறை கொரோனா காலத்தைவிட அதிகரித்துள்ளது
வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும். அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். 60 வருடத்தில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடனை விட திமுக அரசு அதிகம் கடன் வாங்கியுள்ளது. 60 வருடங்களில் தமிழ்நாடு அரசு வாங்கிய கடன் ரூ.5லட்சம் கோடி. தி.மு.க ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் வாங்கிய கடன் மட்டும் ரூ.5லட்சம் கோடி.” என்றார்.
தமிழ்நாட்டின் GST குறைவாக உள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதி பகிர்வு சரியாக கிடைக்கவில்லை. மாநில GDPயில் மொத்த வருவாய் அளவு 10%ல் இருந்து 8.32% ஆக சரிந்துள்ளது.
கடந்த ஆட்சியில் தனிநபர் கடன் 92% உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையால் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது சராசாிக்கும் கீழே சாிந்துள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய்ப் பற்றாக்குறை 2.25%ல் இருந்து 2.22%-ஆக மோசமடைந்துள்ளது.
கனிமவளத்துறையில் ஊழல் காரணமாக கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பரந்த இயற்கை வளங்கள் இருந்தும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. கனிமவளத்துறையில் உள்ள கசிவுகளை அடைத்தால் வருவாயை பெருக்க முடியும். ஓட்டைகளை வைத்து கொண்டு வரியை விதிப்பதால் எந்த பயனும் இல்லை” என்றார்
அரசின் வருவாய் ஒவ்வொரு ரூபாயிலும் 22.8 பைசா வட்டிக்கே செலவாகிறது.பொதுத்துறை நிறுவன கடனையும் சேர்த்தால் மாநிலத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மின்வாரிய குழுமத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது..ஏறத்தாழ 28.217 கோடி ரூபாய் மூலதனச் செலவினம் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டிருக்கும்..ரூ.28,217 கோடி என்பது சுமார் 1,000 கி.மீ. விரைவுச்சாலை (அ) 30 பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகள் (அ) 2,000 பள்ளிக் கட்டடங்களை உருவாக்கும்..
தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் கடன் 1,03,128 கோடி ரூபாய்..
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் கடன்: 5,072 கோடி ரூபாய்..
போக்குவரத்து துறைக்கு ரூ72,667 கோடி கடன்..
தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் கடன்: 30,965 கோடி ரூபாய்..
போக்குவரத்து துறை ஒரு கி.மீ செலவு ரூ.70.61, வருவாய் ரூ.25.97..
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடன் : 27, 181 கோடி ரூபாய்..
தமிழ்நாடு அரசின் நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடி தமிழ்நாட்டின் உத்தரவாத கடன் 3 மடங்கு அதிகரித்தள்ளது..
பொதுத்துறை நிறுவன கடன் மற்றும் நேரடி கடன் ரூ.13.18 லட்சம் கோடி..குடிநீர் வழங்கல் வாரியத்தில் ரூ.7776 கோடி இழப்பு..
மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து உள்ளிட்ட திட்டங்களால் ஆண்டுக்கு ரூ.25000 கோடி செலவீனம்
Tags: அரசியல் செய்திகள்




















