Breaking News

நடிகையும், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளருமான கெளதமி அக்கட்சியில் இருந்து விலகினார் Actress and AIADMK Deputy Propaganda Secretary Gauthami quits the party

அட்மின் மீடியா
0

நடிகையும், அதிமுக துணை கொள்கை பரப்பு செயலாளருமான கெளதமி அக்கட்சியில் இருந்து விலகினார் Actress and AIADMK Deputy Propaganda Secretary Gauthami quits the party


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

இன்று 14/06/2026 முதல் நான் வகித்து வரும் அ இ அ தி மு க அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு. நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன். 

கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள்.பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்.


Give Us Your Feedback