Breaking News

வெற்றி தொலைக்காட்சி - தமிழக வெற்றிகழகத்திற்க்கு டிவி சேனல் ரெடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு Vetri TV - Official announcement that the TV channel is ready for TVK

அட்மின் மீடியா
0

வெற்றி தொலைக்காட்சி - தமிழக வெற்றிகழகத்திற்க்கு டிவி சேனல் ரெடி அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

வெற்றி தொலைக்காட்சி' என்பது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிகாரப்பூர்வ அரசியல் செய்தி மற்றும் பொழுதுபோக்குச் செயற்கைக்கோள் தொலைக்காட்சியாகும். 

இத்தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான வர்த்தக முத்திரை (Trademark) மத்திய அரசிடம் பதிவு செய்யப்பட்டு, கட்சியின் அதிகாரப்பூர்வ சேனலாகச் செயல்படவுள்ளது.



தமிழக சட்டமன்ற வென்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளார். 

இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரும் மூத்த பேச்சாளருமா நாஞ்சில் சம்பத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் மத்திய அரசின் காப்புரிமை, வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைத் துறையில் "வெற்றி" (VETRI) என்ற பெயரில் புதிய செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புக்கான வர்த்தக முத்திரை விண்ணப்பம் செய்யப்பட்டு இருந்தது. 



இது தொடர்பாக  நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

ஊடக உலகில் வலது கால் எடுத்து தன்னுடைய பயணத்தை தொடங்கி இருக்கிறது வெற்றி தொலைக்காட்சி. தமிழக வெற்றிக்கழகத்தின் மீது அவதூறு அம்புகள் எய்யப்படுமானால், அதே அம்புகளை பிடுங்கி எறியும் கடமையை வெற்றி தொலைக்காட்சி செய்யும். ஒரு ஊடகம் தான் சமூகத்தில் சுக துக்கங்களை தீர்மானிக்கும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

ஊடக உலகில் கால் பதித்து இருக்கிற வெற்றித்தொலைக்காட்சி , வெற்றியைதவிர வேறு எதுவும் பெறாது என்ற நம்பிக்கையுடன் வெற்றி தொலைக்காட்சியை நான் வாழ்த்துக்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback