ரயிலில் தீ பரவியதாக வதந்தி கீழே குதித்த பயணிகள் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி!
ரயிலில் தீ பரவியதாக வதந்தி கீழே குதித்த பயணிகள் எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 4 பேர் உடல் நசுங்கி பலி!
மத்தியப் பிரதேசத்தில் ஜான்சி கோட்டத்திற்கு உட்பட்ட ஹேதாம்பூர் - தோல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மாலை 4:15 மணியளவில் இந்த கஜுராஹோ - உதய்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பின் பக்கப் பெட்டியில் படுபயங்கரமான முறையில் தீப்பிடித்து எரிகிறது" என்று யாரோ மர்ம நபர் கிளப்பிவிட்ட வதந்தி ஒட்டுமொத்த ரயிலிலும் காட்டுத்தீயாய் பரவியுள்ளது.இன்ஜினுக்கு அடுத்து இருந்த பொதுப் பெட்டியிலிருந்து பயணி ஒருவர் அவசர கால சங்கிலியை இழுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. ரயில் நின்றவுடன், அதிலிருந்த சில பயணிகள் கீழே இறங்கி அருகில் இருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தின் வழியாக நடக்கத் தொடங்கிய போது பெரோஸ்பூர்-சியோனி பாதாள கோட் விரைவு ரயில் அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் நின்றிருந்த பயணிகள் மீது அந்த ரயில் எதிர்பாராதவிதமாக மோதியதில், 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி, கை, கால்கள் துண்டிக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மொரேனா ரயில்வே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களை மீட்டு அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
