2027–ல் ஹஜ் பயணம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் To apply online for Hajj 2027
ஹஜ் 2027–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது. Hajj 2027: How to apply online
ஹஜ் 2027-ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது ஹஜ் விண்ணப்பங்களைப் பெற தொடங்கியுள்ளது என்பதை தமிழ் நாடு மாநில ஹஜ் குழு அறிவிக்க விரும்புகிறது.
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2027-ற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 22.06.2026 முதல் 20.07.2026 (இரவு 11.59 வரை) முடிய ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது https//hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) "HAJ SUVIDHA" செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஹஜ் 2027-ல் விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி சமர்ப்பிக்கலாம். தங்கள் தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை கவனமாகப் படித்து, பின்வருவனவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளை (புகைப்படங்கள் அல்ல) விண்ணப்பதாரர்கள்பதிவேற்ற வேண்டும்:-
அ. விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாளுக்கு முன்னரோ அல்லது அன்றோ வழங்கப்பட்டதும், குறைந்தது 31.12.2027 வரை செல்லுபடியாகக்கூடியதுமான, இயந்திரத்தால் படிக்கத்தக்க இந்தியக் கடவுச் சீட்டின் (Passport) முன் மற்றும் பின் பக்கங்கள் (1200 x 800 px. JPG/JPEG, 100-500 KB):
ஆ) வெள்ளை நிறப் பின்னணியுடன் கூடிய கடவுச்சீட்டு அளவு បុប (480 x 640 px. JPG/JPEG, 5-20 KB):
இ) வங்கிப் புத்தகத்தின் (passbook) நகல் அல்லது ரத்து செய்யப்பட்ட (cancelled cheque) (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB); மற்றும்
(590 x 750 px. JPG/JPEG, 80-250 KB);
கடந்த ஆண்டைப் போலவே தேர்ந்தெடுக்கப்பட்ட ஹஜ் பயணிகள் இரண்டு புறப்பாட்டு தளங்களை தங்கள் விருப்பத்தின் வரிசை அடிப்படையில் தேர்ந்தெடுக்கலாம்.
2. வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. ஹஜ் 2027-ற்கான வழிமுறைகளை இந்திய ஹஜ் https://hajcommittee.gov.in () "HAJ SUVIDHA" செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம். பாஸ்போர்ட்டுக்காக புதிதாக விண்ணப்பிப்பவர்கள் குடும்ப பெயர்/கடைசி பெயர் ஆகியவற்றை காலியாக விடாமல் கண்டிப்பாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை உள்ளது. மேலும், ஹஜ் 2027-ல் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்படும் புனிதப் பயணிகள் நபர் ஒருவருக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.1,52,300/-ஐ செலுத்த தயார் நிலையில் இருப்பதுடன் தங்களிடம் செல்லத்தக்க பாஸ்போர்ட் உள்ளதை உறுதி செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
3. ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20.07.2026 ஆகும். மேலும் ஹஜ் பயணிகள் மரணம் அல்லது கடுமையான மருத்துவ நோய் தவிர வேறு காரணத்திற்காக பயணத்தை இரத்து செய்ய நேரிட்டால் அபராதம் விதிக்கப்படும். இதனால் விண்ணப்பதாரர்களுக்கு நிதி இழப்பு ஏற்படக்கூடும். எனவே, ஹஜ் பயணம் மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள், தங்களைதயார்நிலை மற்றும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதிப்பாட்டை கவனமாக பரிசீலித்த பின்னரே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
The Tamil Nadu State Haj Committee, Chennai wishes to notify that Haj Committee of India, Mumbai, has commenced receipt of Haj applications from the Muslims residing in Tamil Nadu and intending to perform Haj pilgrimage during Haj 2027. Applicants can fill online application through Haj Committee of India website i.e. https://hajcommittee.gov.in and the mobile application "HAJ SUVIDHA". The application window will be open from 22.06.2026 to 20.07.2026 (upto 11.59 PM). For Haj 2027, the applicants can submit the Haj Application Form "Free of cost". Applicants must carefully read the Guidelines and Undertaking to ensure their eligibility and upload scanned copies (not photographs) of the following:-
a. Front and back pages of machine-readable Indian Passport (1200 x 800 px. JPG/JPEG, 100-500 KB), issued on or before the application closing date and valid up to at least 31.12.2027:
b. Passport-size photo with white background (480 x 640 px. JPG/JPEG, 5-20 KB):
C. Bank passbook or cancelled cheque (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB): and
d. Address proof (590 x 750 px. JPG/JPEG, 80-250 KB):
Like previous year, this year also the selected Haj pilgrims may choose any two Embarkation Points of their choice in order of preference.
2. Haj Committee of India has been implementing the policy of "Haj once in a life time" through Haj Committee of India. The pilgrims
are requested to go through the guidelines for Haj 2027 in the Haj Committee of India's website https://hajcommittee.gov.in or the mobile application "HAJ SUVIDHA". Applicants applying for fresh passport are advised that the Surname/last name field must not be left blank. All individuals intending to perform Haj 2027 through the Haj Committee of India are advised to keep funds ready for the 1st installment of Rs.1,52,300/- and ensure the availability of valid passports.
3. The last date for submission of filled in online application forms by the intending applicants is 20.07.2026. Cancellation on any ground except in cases of death or grave medical illness of the pilgrims will attract penalties and may result in financial loss to the applicant.
Pilgrims are therefore advised to apply only after careful consideration of the preparedness and commitments to undertake the pilgrimage.
Tags: மார்க்க செய்தி
