சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு (floor test) நடைமுறைகள் என்ன முழு விவரம்
சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு (floor test) நடைமுறைகள் என்ன முழு விவரம்
தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு நாளை காலை 9.30 மணிக்கு நடக்கும் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க அல்லது நீடிக்க, 234 இடங்கள் கொண்ட அவையில் 118 இடங்கள் (பாதிக்கும் மேல்) என்ற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
இதற்காக ஆளுநரால் «நம்பிக்கை வாக்கெடுப்பு (Floor Test) நடத்த உத்தரவிடப்படுகிறது, அதில் வாய்மொழி வாக்கு, வரிசைப்படுத்துதல் அல்லது மின்னணு வாக்குப்பதிவு மூலம் எம்எல்ஏக்களின் ஆதரவு சரிபார்க்கப்படும்
முதல்வர் விஜய் அரசு மீது நாளை காலை 9.30 மணிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
முதல்வர் விஜய் முன்மொழியும் அரசினர் தீர்மானம் சட்டமன்றத்தில் நாளை காலை 9.30 மணிக்கு வருகிறது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், சட்டப்பேரவையில் மே 13ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்காக நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கோர வாய்ப்பளித்த பிறகு, வாக்கெடுப்பிற்காக அவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். வாக்கெடுப்பின்போது அவையில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவர்.
இதற்காக அவை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாக கருதப்படும்.
வாக்கெடுப்பு முடிந்தவுடன், எண்ணிக் கணிக்கும் முறைப்படி பெறப்பட்ட இறுதி முடிவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்
Tags: தமிழக செய்திகள்
