Breaking News

முதல்வர் விஜய் இன்று காதர் மொய்தீன் , திருமாவளவன், சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு வைரல் புகைப்படம்! cm vijay today

அட்மின் மீடியா
0

முதல்வர் விஜய் இன்று காதர் மொய்தீன் , திருமாவளவன், சி.வி.சண்முகம், எஸ்.பி வேலுமணி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு வைரல் புகைப்படம்! CM VIJAY



தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது புதிய அமைச்சரவை அமைவதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்களை இன்று (மே 12) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசிய தலைவர் காதர் மொய்தீனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளித்தமைக்காக அவருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர், அவரிடம் ஆசி பெற்றார்

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்

காங்கிரஸ்

காதர் மொய்தீனுடனான சந்திப்பைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் உடனடியாகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அங்கு அவருக்குக் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

அதிமுக எஸ்.பி.வேலுமணி அணி

நாளை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவளிப்போம் என சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில், அவரையும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் சந்தித்தார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள எம்.எல்.ஏ சி.வி.சண்முகத்தின் அலுவலகத்திற்கு சென்றார் முதலமைச்சர் விஜய். 

அவரை சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக சி.வி.சண்முகம் தரப்பு அறிவித்த நிலையில், முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்துள்ளார். இரு பிரிவாக அதிமுக எம்.எல்.ஏக்கள் பிரிந்துள்ள நிலையில், ஒரு பிரிவை மட்டும் விஜய் சந்தித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு சென்ற விஜய்யை, அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

தனது இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை பரிசாக வழங்கினார் விசிக தலைவர் திருமாவளவன்

               

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback