Breaking News

கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு Chief Minister Vijay orders closure of TASMAC shops near temples, schools and colleges

அட்மின் மீடியா
0

கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு Chief Minister Vijay orders closure of TASMAC shops near temples, schools and colleges




பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களால் உத்தரவிடப்பட்டது. மேற்படி ஆணைக்கிணங்க இந்த மூன்று இனங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.



பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது மதுவின் பாதிப்பை குறைக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதெனவும், மக்கள் நலனுக்காக அரசினர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும்பாலும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வளமான வாழ்க்கைக்காக இது முக்கியமானதாக கருதப்படுகிறது.



Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback