குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வாட்ஸ் அப் மூலம் வழங்கும் திட்டம் சென்னை மாநகராட்சியில் அறிமுகம் Chennai Corporation introduces scheme to issue child's birth certificate via WhatsApp
குழந்தையின் பிறப்புச் சான்றிதழை வாட்ஸ் அப் மூலம் வழங்கும் திட்டம் சென்னை மாநகராட்சியில் அறிமுகமாகிறது
பெற்றோர் 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு தகவல் அனுப்பி பிறப்புச் சான்றிதழை பதவிறக்கம் செய்யலாம் Chennai Corporation introduces scheme to issue child's birth certificate via WhatsApp
வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ் அனுப்பப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் வெளியிட்ட அறிவிப்பில், “ பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் கணினி வாயிலாக பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்கள் பிடிஎஃப் வடிவத்தில் எளிதில் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்.
மேலும், 9445061913 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் பெற்றோர் பிறப்புச் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 9445061913 என்ற எண்ணிற்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து ஹாய் அல்லது வணக்கம் என அனுப்பி, பிறப்புச் சான்றிதழ் தரவிறக்கம் என குறுஞ்செய்தி அனுப்பினால் சான்றிதழ் தரவிறக்கம் செய்யும் இணைப்பு அனுப்பப்படும்.
பொதுமக்கள் இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் இலவசமாக சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்
