Breaking News

மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கின்றார் தமிழக முதல்வர் விஜய் - முழு தகவல்

அட்மின் மீடியா
0

மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கின்றார் தமிழக முதல்வர் விஜய் - முழு தகவல்


இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்.முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது சட்டப்பேரவை நடைபெற்று வரும் நிலையில், அவை முடிந்தவுடன், பிற்பகல் 2.30 மணிக்கு மு.க. ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இன்று தமிழக சட்டப்பேரவை கூடிய நிலையில், அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் ஒருவர் பின் ஒருவராகப் பதவியேற்று வருகின்றனர். இந்தச் சூழலில், பதவியேற்பு விழா முடிந்த கையோடு, இன்று மதியம் சுமார் 2:30 மணி அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களை அவருடைய இல்லத்தில் நேரடியாகச் சென்று சந்திக்கிறார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய். 

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், இதனைத் தொடர்ந்து மற்ற தலைவர்களையும், தன்னுடைய ஆட்சி அமைவதற்கு உதவிய முக்கியக் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback