Breaking News

அமைச்சர்களாக பதவியேற்ற வன்னிஅரசு மற்றும் ஷாஜகானுக்கு இலாகா ஒதுக்கீடு

அட்மின் மீடியா
0

இன்று அமைச்சர்களாக பதவியேற்ற வன்னிஅரசு மற்றும் ஷாஜகானுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் துறை ஒதுக்கீடு. ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனை உள்ளடக்கிய சமூக நீதித் துறை வன்னிஅரசுக்கு ஒதுக்கீடு



முதலமைச்சர் விஜய் தலைமையில் ஏற்கனவே 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்ற நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யும் வகையில் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அதில் தவெக கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு 2 அமைச்சர்களும் கொடுக்கப்பட்டது

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், முஸ்லிம் லீக் கட்சியும் அமைச்சரவையில் இடம்பிடிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தின் அறிவித்தார் மேலும். எம்.எல்.ஏ ஷாஜகான் பெயரை பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக இடம் பெறுகிறது. தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக இது அமைந்திருக்கிறது.

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் பங்கு பெறுவது என விடுதலை சிறுத்தைகள் கட்சி முடிவு எடுத்துள்ளது என கட்சியின் பொருளாளர் எஸ். எஸ் பாலாஜி அறிவித்துள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback