Breaking News

சபாநாயகர் தேர்தலில் தவெக சார்பில் ஜே.சி.டி.பிரபாகர் போட்டி

அட்மின் மீடியா
0

சபாநாயகர் தேர்தலில் தவெக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகர் போட்டி பேரவைச் செயலகத்தில் இதற்கான படிவத்தை வழங்கினார்


ஜே. சி. டி. பிரபாகர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 

இவர் 2011 சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த வில்லிவாக்கத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ரங்கநாதன் என்பவர் வெற்றிபெற்றார்.

2016 செப்டம்பரில், இவர் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்டார்.

பிரபாகர் ஜே.சி.டி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வேட்பாளராக 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்குகள் தொகுதியில் போட்டியிட்டு 58,965 வாக்குகள் பெற்று 15,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[5]

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback