தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமரைச் சந்திக்க நாளை டெல்லி செல்கிறார்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரதமரைச் சந்திக்க நாளை டெல்லி செல்கிறார்
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இது என்பதால், அரசியல் மற்றும் அரசு நிர்வாக வட்டாரங்களில் இப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய முக்கியத் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சந்திப்புகளின் போது, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்குத் தேவையான மத்திய அரசின் ஒப்புதல்கள், மாநிலத்திற்கு வர வேண்டிய நிதிப் பங்கீடு மற்றும் நிலுவைத் தொகைகளை விரைந்து விடுவிப்பது போன்ற பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் விஜய் நேரடியாக வழங்க உள்ளார்.
இந்த டெல்லி பயணம் குறித்துத் தமிழக அரசுத் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான பயண நிரல் வெளியாகவில்லை என்றாலும், நாளை அவர் டெல்லி செல்வது உறுதியாகியுள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags: அரசியல் செய்திகள்
