Breaking News

அ.ம.மு.க எம்.எல்.ஏ-வை காணவில்லை - டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

அட்மின் மீடியா
0

 குதிரைப்பேரத்தில் ஈடுபடுவதாக தவெக மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஊழலில் ஈடுபடுகிறார் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்.எங்கள் கட்சியின் கடிதத்தையும் கையெழுத்தையும் போலியாக தயாரித்து ஆளுநரிடம் தங்களுக்கு ஆதரவாக கொடுத்திருக்கிறார்கள் என டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

எங்கள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவரை பிடித்து வைத்திருக்கலாம். ஆனால் எங்களது கட்சியின் கடிதத்தை போலியாக தயாரித்து விஜய்க்கு ஆதரவாக கொடுத்திருக்கிறார்கள். இதில் விஜய் தான் ஈடுபட்டிருக்கிறார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குதிரை நேரத்தில் ஈடுபட்டிருக்கிறார் டிடிவி தினகரன் கடும் குற்றச்சாட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக லெட்டர் பேடை forgery செய்து எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அது கையெழுத்தை போலியாக போட்டு விஜய்க்கு ஆதரவளித்ததாக ஆளுநருக்கு கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் டிடிவி தினகரன்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback