டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்களை விற்க தமிழக அரசு தடை.alcohol ban for under-21
அட்மின் மீடியா
0
டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மதுபானங்களை விற்க தமிழக அரசு தடை.alcohol ban for under-21
21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை.
வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் -டாஸ்மாக்
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் | மதுக்கூடங்களில் விதிகள் 2003 விதி எண் 11A -ன் படி 21-வயதிற்குட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளரின் வயதில் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களிடம் வயதிற்கான ஆதாரமான ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களை சரிபார்த்து 21-வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே மதுபானங்களை விற்பனை செய்யபட வேண்டும்.
மேலும் 21 வயதிற்கு கீழ் உள்ள வாடிக்கையாளருக்கு மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
