Breaking News

மாநிலங்களவையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இடத்திற்கு ஜூன் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மாநிலங்களவையில் அதிமுகவின் சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இடத்திற்கு ஜூன் 18ல் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் CVS. இதன் பதவிக்காலம் 2028ம் ஆண்டு ஜூன் 29 வரை உள்ளது

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ராஜ்யசபா எம்பியாக இருந்தார். இவர் சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர், ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதையடுத்து அவர் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா சபாநாயகருமான ரா தாகிருஷ்ணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனால் ராஜ்யசபா எம்பி இடம் ஒன்று, தமிழகத்தில் காலியாகியுள்ளது. 

இந்நிலையில் இன்று சி.வி.சண்முகம் ராஜினாமா செய்த ராஜ்யசபா பதவியிடத்துக்கு ஜூன் 18ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்: ஜூன் 8ம் தேதி

வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்: ஜூன் 11ம் தேதி

தேர்தல்: ஜூன் 18ம் தேதி; 

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஜூன் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 107 எம்.எல்.ஏ-க்களை பெற்றுள்ள த.வெ.கவுக்கு முதல் எம்.பி கிடைக்க வாய்ப்புள்ளது.

தில்லியில் தவெகவின் குரலாக உறுதியுடன் செயல்படும் அனுபவம் வாய்ந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க தீவிர ஆலோசனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback