Breaking News

17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக ஆதரித்து மனு

அட்மின் மீடியா
0

அதிமுகவில் வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏக்களில் 17 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக ஆதரித்து மனு..




எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம்,விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் 30 உறுப்பினர்கள் ஒரு அணியாக உள்ளனர்.

அவர்கள் வேலுமணியை சட்டமன்ற குழு தலைவராக ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக கூட எடப்பாடி பதவியேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அப்படி ஒன்று நடந்தால் எடப்பாடியின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். சட்டமன்றத்தில் ஆதரவு இல்லாத நிலையில் கட்சியிலும் அவருக்கு ஆதரவு குறைந்து உள்ளதால் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றக்குழு தலைவராக செயல்படுவார் என சட்டப்பேரவை செயலரிடம் கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்துள்ளனர்.

மொத்தம் 47 எம்.எல்.ஏக்கள் அதிமுக சார்பில் வென்றுள்ள நிலையில், 17 எம்.எல்.ஏக்கள் சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ளதால் அதிமுக மீண்டும் பிளவுபடுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மீதமுள்ள 30 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனநிலையில் உள்ளதால், அவர்கள் எடுக்கப்போகும் முடிவு அடிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேலும் சிக்கலாக அமைந்துள்ளது

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்மும் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவர் சட்டமன்றக்குழு தலைவராகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback