Breaking News

கோவையில் அதிர்ச்சி காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - 2 பேர் கைது

அட்மின் மீடியா
0

கோவையில் அதிர்ச்சி காணாமல்போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு - 2 பேர் கைது



கோவை சூலூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை மாலையில் கடைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அருகில் உள்ள இடங்களி சிறுமியை பெற்றோர் தேடினர்.

சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில்சூலூர் அருகே உள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டனர். 

விசாரணையில் காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட சிறுமிதான் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது. 

சிறுமியை கடத்தி சென்றவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசியதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்..

சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இஎஸ்.ஐ மருத்துவமனை முன்பு திரண்ட சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதற்கிடையே, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நாகையை சேர்ந்த கார்த்தி (வயது 33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மோகன் ராஜ் என்பவரும் கைதாகியுள்ளார். இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்ட 10 வயது சிறுமி, 2 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையில் இருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback