தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைக்கும் லோக்போல் கருத்துக்கணிப்பு முழு விவரம் இதோ lok poll survey tamil nadu
தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைக்கும் லோக்போல் கருத்துக்கணிப்பு முழு விவரம் இதோ
லோக்போல்' என்ற தனியார் அமைப்பு நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 500 பேர் என்ற வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த கருத்துக் கணிப்பின்படி திமுக கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலில் 181 முதல் 189 இடங்களை கைபற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மீண்டும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைக்கும் என்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க கூட்டணி 38 முதல் 42 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும்,
முதன்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக), 8 முதல் 10 தொகுதிகளில் வெற்றி பெற்று, 23.9% வாக்குகளைப் பெற்று ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்கும் எனக் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி: 4.9% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது. இதர கட்சிகள்: 2.1% வாக்குகளைப் பெறலாம்.
The most wanted #TamilNadu Survey is Out!Here’s the vote share & seat projection from our mega ground survey:
▪️DMK+ 181–189 | 40.1%
▪️ADMK+ 38–42 | 29%
▪️TVK 8–10 | 23.9%
▪️NTK 00 | 4.9%
▪️Others 00 | 2.1%
எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி இரண்டாம் இடத்திலும், புதிதாகத் தேர்தலைச் சந்திக்கவுள்ள தவெக சுமார் 24 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
