தவெக வேட்பாளர் விஜய்யின் இரு வேட்பு மனுக்களும் ஏற்பு!
சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 30-ந்தேதி வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் தாக்கல் செய்தார்
இதேபோல, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை கடந்த 2-ந்தேதி திருச்சியில் விஜய் தாக்கல் செய்தார். 2 இடங்களில் வேட்புமனு தாக்கலில் பிரமாண பத்திரத்தில் தனது சொத்துகள் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
விஜய் மனு ஏற்கப்பட்டதற்கு திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மேலும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
