Breaking News

ட்ரம்பை பதவி நீக்கம் செய்யனும் 25வது சட்டப்பிரிவை பயன்படுத்தனும் எதிர் கட்சி விடுத்த கோரிக்கை முழு விபரம்

அட்மின் மீடியா
0

ஈரான் - இஸ்ரேல் போர் விவகாரத்தில் அடுத்தடுத்து வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்துக்கள் அமெரிக்கர்கள் மத்தியிலேயே கடும் எதிர்ப்புகளை பெற்றுவருகிறது


இதன் காரணமாக அவரைப் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன.Chris MurphyChris Murphy அந்த வகையில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவரும், செனட்டருமான கிறிஸ் மர்பி (Chris Murphy), ”ட்ரம்ப் ஒரு கட்டுப்பாடற்ற நபராக இருந்து, தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார். ஆகையால், அவரை 25-ஆவது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யவேண்டும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அரசியமைப்பின் 25-ஆவது சட்டத் திருத்தம், பிரிவு 4இன்படி, ஓர் அதிபர் தனது கடமைகளைச் செய்ய உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ தகுதியற்றவர் என்று கருதப்பட்டால், அவரைப் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யலாம்.

டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சட்டம் இயற்றுபவர்களேவும் டிரம்ப்பின் தற்போதைய மாற்றங்களுக்கு எதிரான குரல்கள் எழுப்பி வருவதால் பிரச்சனை சூடுபிடித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால், டிரம்ப் பதவி பறிக்கப்படும் என்றே சொல்லப்படுகிறது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback