Breaking News

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. 

அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. தேர்வுகள் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பணிகள் கிட்டதட்ட முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கான பணிகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.அதே போல, 11ஆம் வகுப்பு அரியர் தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம். 

இந்த இணையதளத்திற்கு முதலில் சென்று 12th Higher Secondary result என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பிறந்த தேதி, பதிவு எண் உள்ளிட வேண்டும். இதன்பிறகு, பாட வாரியாக உங்களுக்கான தேர்வு முடிவுகள் தோன்றும். உங்கள் தேர்வு முடிவுகளை சரிபார்த்துவிட்டு, download என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மே 8ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback