தமிழகத்தில் தவெகவுக்கு 120 இடங்கள் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பான எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கருத்துக் கணிப்பில் தமிழகத்தில் திமுக,, தவெக இடையே கடுமையான போட்டி என்றும் தவெக அட்சியமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது
ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில்
திமுக கூட்டணி 91 - 110 தொகுதிகளை கைப்பற்றும்
அதிமுக 22 - 32 தொகுதிகளில் கைப்பற்றும்
விஜய்யின் தவெக 98 -120 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்
மற்றவர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார்கள் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவீத அடிப்படையில் திமுக, தவெக இரண்டு கட்சிகளும் 35 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக 23 சதவீதம் வாக்கு பெறுவார்கள் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலில் கூறப்பட்டுள்ளது.
Tags: அரசியல் செய்திகள்
