Breaking News

புதுச்சேரி 2026 சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங். 16, பாஜக 14 இடங்களில் போட்டிமுழு விபரம்

அட்மின் மீடியா
0

புதுச்சேரி 2026 சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங். 16, பாஜக 14 இடங்களில் போட்டிமுழு விபரம்



புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை காமராஜர் சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் இன்று மாலை நடந்தது. என்.ஆர் காங் தரப்பில் அதன் தலைவரான முதல்வர் ரங்கசாமி,பொதுப்பணித்துறை லட்சுமி நாராயணன் ஆகியோரும் பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா,மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, “புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர்காங். 16, பாஜக 14 இடங்களில் போட்டியிடவுள்ளன. பாஜகவிடம் உள்ள 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்” என்றார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback