ரயில்வே குரூப் டி தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் இலவசப் பயிற்சி! முழு விவரம்
ரயில்வே குரூப் டி தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசின் இலவசப் பயிற்சி! முழு விவரம்
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி.,) குரூப் டி தேர்விற்கு 10-ம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தமாக 22,195 காலிப்பணியிடங்களுக்கு https://www.rrbapply.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இக்காலிப் பணியிடங்களுக்கு 02.03.2026-க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகும். விண்ணப்பதாரர்கள் 01.01.2026-ம் நாளன்று 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.
இத்தேர்வுகள் கணினி அடிப்படையிலும், உடல் திறன் சோதனை/ மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையிலும் நடைபெறும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் உட்பட தமிழ் மொழியிலும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவு, அறிவியல், கணிதம் ஆகியவற்றிலிருந்து 100 கேள்விகள் கொள்குறி வகையில் கேட்கப்படும். தேர்வுக்கான விரிவான பாடத்திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பைப் பார்க்கவும்.
சென்னை : சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 19.02.2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7 என்ற கூகுள் படிவத்தில் நிரப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்கள் சுயமாக போட்டித்தேர்வுக்கு தயாராகும் வகையில் studyhall வசதியும் உள்ளது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான மென் பாடகுறிப்புகள் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7
Tags: தமிழக செய்திகள்
